2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

முகூர்த்தத்துக்கு தயாராகவிருந்த மணமகன் விபத்தில் காயம்

Menaka Mookandi   / 2013 ஜூலை 05 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கல்லடி, புதுப்பாலத்தில் முச்சக்கர வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று இன்று மாலை இடம்பெற்றது.

சம்பவத்தில், முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், நாளை திருமண பந்தத்தில் ஈடுபடவிருந்த நிலையிலேயே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு நகரிலிருந்து கல்லடி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் கல்லடியிலிருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து தொடர்பில் கல்லடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .