2026 மே 14, வியாழக்கிழமை

dd

டெங்கு விழிப்புணர்வு ஊர்வலங்கள்

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள பல பாடசாலைகளில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலங்கள் நேற்று நடைபெற்றன.

காத்தான்குடி அந்நாசர் வித்தியாலயம் மற்றும் மில்லத் மகளிர் வித்தியாலயம், அல்அமீன் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்கள் டெங்கு விழிப்புனர்வு ஊர்வலங்களில் ஈடுபட்டனர்.

காத்தான்குடி முதலாம் குறிச்சி அந்நாசர் வித்தியாலய மாணவர்களின் டெங்கு விழிப்புனர்வு ஊர்வலத்தில் காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எஅல்லாபிச்சை உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

டெங்கு நுளம்பை ஒழிப்போம், சூழலை தூய்மைப்படுத்துவோம், சுற்றாடலில் காணப்படும் குப்பை கூழங்களை அகற்றுவோம் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் தாங்கியிருந்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .