2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

காகங்கள் உயிரிழப்பு

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேச வீதிகளில் காகங்கள் மற்றும் நாய்கள் பரவலாக இறந்து காணப்படுகின்றன.

வானத்தில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென உயிரிழந்த நிலையில் நிலத்தில் வீழ்ந்ததை இன்று சனிக்கிழமை காலை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, தெருநாய்கள் சிலவும் ஆங்காங்கே உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.

வளர்ப்பு நாய்கள் சிலவற்றுக்கு தேங்காயப்பால் பருக கொடுத்ததால் அவை உயிர் பிழைத்ததாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விஷமூட்டப்பட்ட உணவை உண்டு இவை உயிரிழந்திருகலாம் என பொதுமக்கள் சந்தேம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .