2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்கள் வேலைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 04 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பஸ் டிப்போ ஊழியர்களில் சிலர் தங்களுக்கு வழங்கப்படாதுள்ள 3 மாதச் சம்பளத்தை  வழங்குமாறு கோரி இன்று புதன்கிழமை காலை  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான காத்தான்குடி பஸ் டிப்போவில் கடமையாற்றி வருகின்ற 50 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இவ்வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஜுன், ஜுலை, ஓகஸ்ட் மாதங்களுக்கான சம்பளம் இதுவரையில் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்த இந்த ஊழியர்கள், வழங்கப்படாதுள்ள மேற்படி 3 மாதங்களுக்கான சம்பளத்தை வழங்கும்வரை தங்களது வேலைநிறுத்தம் தொடருமெனவும் கூறினர்.

காத்தான்குடி டிப்போவில் முறையாக மாதா மாதம் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுவதில்லையெனவும் இதனால் தாங்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காத்தான்குடி பஸ் டிப்போ முகாமையாளர் ஏ.எம்.அப்தர் றஹீமிடம் கேட்டபோது,

இந்த டிப்போவுக்கு கடந்த ஜனவரி மாதம் தான்  முகாமையாளராக நியமிக்கப்பட்டதாகவும் தான் இங்கு முகாமையாளராக நியமிக்கப்படும்போது, இச்சம்பள பாக்கி நிலுவை இருந்தது. இது தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

கடந்த ஓகஸ்ட் மாதத்திற்குரிய சம்பளம் எதிர்வரும் 10ஆம் திகதி இவர்களுக்கு வழங்கப்படும்.

இச்சம்பள நிலுவை தொடர்பில்  தமது இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைமை அலுவலகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் கூறினார். 
மேலும், காத்தான்குடி பஸ் டிப்போவில் ஊழியர்கள் தேவைக்கதிமாக உள்ளதாகவும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X