2025 மே 05, திங்கட்கிழமை

'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது'

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'அரசாங்கத்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, ஏறாவூரிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

அரசாங்கத்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை வெளியில் போட முடியாது. அடுத்த ஆண்டு(2014) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. அந்த தேர்தலுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு முக்கியமாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் சுமார் 53000 வாக்குகளை பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அரசாங்கத்திற்கு தேவையாகும். அதனால் அரசாங்கம் முஸ்லிம் காங்கிரசை வெளியில் போடாது.

இன்று இந்த நாட்டில் இன வாதம் தலை தூக்கியுள்ள நிலையில் பெரும்பான்மை சமூகம் பேரினவாதத்தை நோக்கி செல்கின்றன. அதனால் சிறுபான்மை சமூகங்களான தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டும்.

வட மாகாணத்தில் நடந்து முடிந்த தோதலின் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமை பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் தீர்;வு பற்றி பேசவேண்டும். அதன் மூலம் தீர்வொன்றை எட்ட முடியும்.

முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு எந்த தீர்வையம் பெற்றுக்கொள்ள முடியாது.

கிழக்கு மாகாணம் அனைத்து வளங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினை பயன்படுத்தினால் அனைவருக்கும் இங்கு தொழில் வாய்ப்பு இருக்கின்றது. இங்குள்ள வளங்களை பயன்படுத்தி தொழில்களில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் வராது.

எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வதை முற்றாக தடுப்பதற்காக மாற்று தொழில் நடவடிக்கைகளை நாம் இந்த மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் இரண்டு கிராமங்களை தெரிவு செய்து இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்குள் அந்த பிரதேசத்திலிருந்து எந்தவொரு பெண்ணும் பணி; பெண்ணாக வெளி நாட்டுக்கு செல்லக் கூடாது என்ற நிலையை உருவாக்குவதே எனது இலக்காகும்.

அதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூரை தெரிவு செய்துள்ளேன். அதேபோன்று இன்னுமொரு தமிழ் கிரமம் ஒன்றையும் தெரிவு செய்து அந்த பிரதேசங்களில் வறுமையான நிலையிலுள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செய்து அவர்களுக்கு மாதமொன்றுக்கு பத்தாயிரம் ரூபா வருமானத்தை ஏற்படுத்த வழி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • VALLARASU.COM Friday, 27 September 2013 03:33 PM

    வெளியில் விடப்போகிறார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது... வட மாகாணம் தவிர ஏனைய மாகாணங்களில் சிங்கள‌ மக்கள் அரசாங்கத்திற்கு அளித்துள்ள வாக்குகளை இவர்கள் பார்க்கும் போது, இன வாதம் ஏற்படும் போது புரியவில்லையா...

    Reply : 0       0

    Vaheed Sunday, 29 September 2013 09:43 AM

    கேட்க நல்லா இருக்கு, நடைமுறை சாத்தியம் எப்படி...???

    Reply : 0       0

    முஸாபிர் Monday, 30 September 2013 01:03 AM

    ஒருவேளை வெளியே போட்டாலும் நாங்கள் வெளியேற மாட்டோம்..!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X