2025 மே 05, திங்கட்கிழமை

அரைக்கும் இயந்திரம் கையளிப்பு

Kogilavani   / 2013 செப்டெம்பர் 27 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்ட விதவைகளின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிலையத்தினால் அரைக்கும் இயந்திரம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.   

ரூபாய் 64 ஆயிரம் பெறுமதியான இவ்  இயந்திரத்தை அரச அதிபர் பி.எஸ்.ஏம். சாள்ஸ் பயனாளிக்கு வழங்குவதற்காக உழைக்கும் கரங்கள் நிறுவன ஊழியர் ஏ.ஞானத்திடம் வழங்கினார்.

மட்டக்களப்பு, மாவட்டச் செயலகத்தில் வைத்து இவ்  இயந்திரம் கையளிக்கப்பட்டது.

மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்சளியன், ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிலையத்தின் பிராந்திய இணைப்பாளர் இ.தர்சன் மற்றும் திட்டப் பணிப்பாளர் ரி.சுதர்சன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X