2025 மே 05, திங்கட்கிழமை

காட்டு யானைகள் நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்ததால் மக்கள் அல்லோலகல்லோலம்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 28 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
 
வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திக்கோடைக் கிராமத்தில் நள்ளிரவில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் திகிலடைந்து அல்லோலகல்லோலப்பட்டனர்.
 
நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் இன்று அதிகாலை அளவிலேயே கிராமத்தை விட்டு நகர்ந்து சென்றதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
 
நள்ளிரவு 11 மணியளவில் இரண்டு காட்டு யானைகள் அட்டகாசமாக ஊருக்குள் புகுந்துள்ளன. பயிர்களையும் இன்னபிற மரங்களையும் இவை துவம்சம் செய்த அரவம் கேட்ட பொழுதுதான் ஊருக்குள் காட்டு யானைகள் புகுந்திருப்பது கிராம மக்களுக்குத் தெரிய வந்திருக்கின்றது.
 
யானைகள் புகுந்த திக்கோடை மூன்றாம் வட்டாரத்தில் மின்சாரமில்லை. கிராம மக்கள் தீ மூட்டியும், மத்தளம் அடித்தும் பட்டாசு வெடிகளைக் கொளுத்தியும், எரிபந்தம் பற்றவைத்தும் ஊருக்குள் புகுந்த யானைகளை விரட்டியடித்தாகக் கூறுகின்றனர்.
 
அதேவேளை கிராம மக்கள் பயப்பீதி காரணமாக இரவுப் பொழுது முழுவதும் தாங்கள் விழித்திருந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X