2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

'கிழக்கு மாகாணத்திலுள்ள ஆசிரியர்களது பிரச்சினைகள், காணி, விளையாட்டு, வளப்பங்கீடு  தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் காணப்படும்' என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (8), காணி மற்றும் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தலைமையில் திருகோணமலையில் நடைபெற்றது.

கடந்த மாதத்தின் அமர்வின் போது அமைச்சுக்கள் ஐந்தினுடைய ஆலோசனைக் குழுக்கள் மற்றும் ஏனைய ஆலோசனைக் குழுக்கள் சரியான முறையில் கூடிப் பிரச்சினைகளை ஆராய்வதில்லை என மாகாண சபை உறுப்பினர்
இரா.துரைரெட்ணத்தால் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தது.

அப்பிரேரணையை அனைத்து உறுப்பினர்களும் ஏகமானதாக ஆதரித்து, அவற்றுக்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (8) பகல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், நீக்குதல், வளங்கள் சமப்படுத்தல், காணி தொடர்பான பிரச்சினைகள், விளையாட்டு தொடர்பான சிக்கல்கள், பொத்துவில் உப அலுவலகத்தினை இயங்கச் செய்தல், அரசியல் பழிவாங்கல் எனப்பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

இவற்றில் காணி தொடர்பான விடயங்கள் பல இருப்பதனால் விசேட கூட்டம் ஒன்றில் ஆராய்வது என்றும், பொத்துவில் உப அலுவலகம் செயற்படக்கூடிய வகையிலான நடவடிககைகள் மேற்கொள்வது,   ஆசிரியர் சமமின்மையை அடுத்த வருடத்துக்குள் சீர்செய்தல், வளப்பற்றாக்குறைப் பிரச்சினையைத் தீர்த்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

காணி மற்றும் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, அமைச்சர் உதுமாலெவ்வை, எதிர்க் கட்சித் தலைவர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்களான இரா. துரைரெட்ணம், கே.துரைராசசிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.புஸ்பகுமார, காணி ஆணையாளர், உப ஆணையாளர், உதவி ஆணையாளர், மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி,ஏ,நிசாம், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், உள்ளிட்டபலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X