2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உலக உள நல தினத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


உலக உள நல தினத்தையொட்டி நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன.

இதில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உள நல தினத்தையொட்டிய வைபவமொன்று நேற்று(10.10.2013)மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித வளனார் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் உல நள பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி டாக்டர் பி.ரமேஸ், எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் இயக்குனர் அருட் தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், கலந்துகொண்ட வயோதிபர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .