2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அழகாபுரிக் கிராமத்தில் குடிசைகள் தீக்கிரை; சந்தேகத்தில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை, அழகாபுரிக் கிராமத்தில்  குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை நேற்று சனிக்கிழமை மாலை ஏறாவூர் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அழகாபுரிக் கிராமத்தில் 05 குடிசைகள் நேற்று சனிக்கிழமை தீக்கிரையாக்கப்பட்டன்.  இதன்போது தீ பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையை பிரதேசவாசிகள் மேற்கொண்டனர்.

குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  பொதுமக்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, இந்தச் சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .