2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலத்திரனியல் விற்பனை நிலையத்தில் கொள்ளை; ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு நகரின் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பிரபல இலத்திரனியல் விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி இலத்திரனியல் விற்பனை நிலையம் கடந்த வியாழக்கிழமை இரவு உடைக்கப்பட்டு அங்கிருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருந்தன.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட நிலையில், குறித்த சந்தேக நபர் வவுணதீவுப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொத்தியாபுலைப் பகுதியில் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு நகரில் காணாமல் போனதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும்; இந்தச் சந்தேக நபரே கொள்ளையிட்டுள்ளமை  தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இந்தச் சந்தேக நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .