2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சமுர்த்திக் குடும்பங்களுக்கு சுயதொழிலுக்கான கடனுதவி

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி உதவி பெறும் பயனாளிக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் கடன் உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் மீராகேணிக் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13)  ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர், ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானா, ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஸா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

40,000 ரூபாவிலிருந்து 80,000 ரூபா வரையான தொகையில் சுயதொழிலுக்கான கடன் உதவிகள் ரொக்கப் பணமாக வழங்கப்பட்டதாக  ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.றமீஸா தெரிவித்தார்.

முதற்கட்டமாக மொத்தம் 8 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த சமூர்த்தி சுயதொழில் கடனுதவித் திட்டக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .