2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

விஷ்வ ஹிந்து பரிஷத் இந்து மக்களின் வளர்சிக்காக பாடுபடுகின்து

Kogilavani   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

'எமது விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பானது இந்து மக்களின் வளர்சிக்காக பாடுபடுகின்ற அமைப்பாகும். எம்மைப் பற்றி பிழையான கருத்துக்களுடன் விமர்சிப்பவர்கள் எம் செயற்பாடுகள், எமது நோக்கம் என்பவற்றை அறிந்து விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்' என விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிழக்கு மாகாண அமைப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் அமைப்பின் தலைவருமான கமலதாஸ் தெரிவித்தார்.

கல்லடியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டார்.

இச்சந்திப்பில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தொண்டர் அணி அமைப்பாளர் சுதர்சனும் கலந்துகொண்டார்.

இதன்போது, அவர் மேலும் கூறுகையில்,

சிலர் இந்து மதத்தினை வைத்து உழைப்பதற்காகவும் அரசியல் செய்வதற்காகவுமே செய்றபடுகின்றனர். அவ்வாறு செய்பவர்களுக்கு நாம் இந்து மக்களுக்காக சேவை செய்வது பொறுக்கவில்லை. இதனாலேயே இவ்வாறான தவறான கருத்துக்களை வெளியிட்டு மக்களை குழப்புகின்றனர். எம்மை அதற்கு பலிகடாவாக்குகின்றனர்.

நாம் எமது செயற்பாடுகளையும் எமது அமைப்பின் செயற்பாடுகளையும் அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையாக மேற்கொள்கின்றோம். எமது நிகழ்வுகள் கூட்டங்கள் நடைபெறும்.

ஒரு சிலர் இங்கு இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்காகவும் இந்து மதத்தின் வளர்ச்சிக்காகவும் வெளிநாடுகளில் இருந்து நிதியினைப் பெற்று அதனை வெளிப்படுதன்மையுடன் பயன்படுத்த தவறுகின்றனர். இதனால் பெறப்படும் நிதிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இதர சேவைகளுக்கும் சரியான முறையில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றியோ அதன் வரவு செலவுகள் பற்றியோ தெரியாது.

எமது அமைப்பானது அரசியல் சார்பற்று அரசியல் கட்சிகளுக்கு அப்பால் அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைத்து ஒரே நிலைப்பாட்டுடன் எமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

எம்மில் குற்றம் இருந்தால் அதனை சபை ஒன்றில் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அதனை விடுத்து மறைந்திருந்து எம்மைப் பற்றியும் எமது நிறுவனங்கள் பற்றியும்  பொதுமக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை வெளியிடுவதும் செயற்பாடுகளை மேற்கொள்வதும் தவறான செயற்பாடாகும்.

நாம் பிற மதங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் மதத்தின் பெயரால் அரசியல் செய்து இந்து மக்களை அடக்க யாரும் முற்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்துமக்களுக்கு வழங்கப்படுகின்ற வேலைவாய்ப்புகள் மற்றும் காணிப்பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சனைகள் போன்ற விடயங்களின் இனத்துவ மதத்துவ அரசியலை மேற்கொள்ளாது அனைவருக்கும் வளப்பகிர்வு சமமானதாக இருக்கவேண்டும்.

எமது விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பில் பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களும் முக்கியஸ்தர்களும் இருக்கின்றனர். அதேபோன்று சமுக மட்டத்தில் உயர் பதவிகளையும் வகிப்பவர்களும் இருக்கின்றனர்.

எமது அமைப்பைப் பற்றி விமர்சிப்பவர்கள் இவற்றை அறிந்து விமர்சனம் செய்யவேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X