2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கடைத் தொகுதியின் நிர்மாண வேலைகளை தொடர நீதிமன்றம் அனுமதி

Super User   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதான வீதியில் நிர்மானிக்கப்பட்டு வரும் கடைத் தொகுதியின் நிர்மாண வேலைகளை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வழங்கியது.இந்த கட்டிடம் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசலினால்நிர்மானிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கடைத் தொகுதிக்கான நிர்மாண வேலைகளை மேற்கொள்ள பள்ளிவாசல் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.
இதன்போது, குறித்த கட்டிடம் சட்டவிரோதமான கட்டிடம் என காத்தான்குடி நகர சபை தெரிவித்தது. அத்துடன் நகர சபையின் கட்டிட அனுமதி பெறாமல் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்படுவதாக காத்தான்குடி நகர சபை தெரிவித்து நிர்மான வேலைகளை மேற்கொள்ள அனுமதி மறுத்தது.

இதனால் குறித்த இடத்தில் கடந்த சனிக்கிழமை சலசலப்பு ஏற்பட்டதையடுத்து காத்தான்குடி பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சமூகமளித்து  நிலைமையினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி நகர சபை மற்றும் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாசல் நிருவாகம் ஆகியவற்றின் முறைப்பாடுகளை காத்தான்குடி பொலிஸார் பதிவுசெய்தனர்.

இதனையடுத்து குறித்த இரண்டு சாரரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியபோது திங்கட்கிழமை வரை இந்த இடத்தில் எவ்வித நிர்மாணவேலைகளையும் செய்ய வேண்டாம் என பதில் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபபட்ட வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா முன்னிலையில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலினால் காத்தான்குடி பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடைதொகுதியின் கொங்கிறீட் நிர்மாண வேலைகளை மேற்கொள்ளுவதற்கு நீதவான் என்.எம்.அப்துல்லா அனுமதி வழங்கினார்.

இந்த பள்ளிவாயலின் கடைத்தொகுதியின் கட்டிட நிர்மாண வேலைகளை யாராவது குழப்ப விளைவிக்க முனைந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு இதன்போது நீதவான் உத்தரவிட்டார். இதன்போது பள்ளிவாசல் நிருவாகம் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுபபினர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X