2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

காட்டு யானைத் தாக்கியதில் முதியவர் ஒருவர் பலத்த காயங்களுக்குளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலயத்திற்குட்பட்ட எல்லைக் கிராமமாகக் காணப்படும் சின்னவத்தைக் கிராமத்தை சேர்ந்தவரையே யானை தாக்கியுள்ளது.

வீட்டிலிருந்த 67 வயதுடைய பாலிப்போடி சிவகுரு என்ற முதியவரே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமத்திக்கப் பட்டுள்ளதாக சின்னவத்தைக் கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கோபாலன்- பிரசாத் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க சின்னவத்தைக் கிராமத்தினுள் நேற்று புகுந்த காட்டுயானைக் கூட்டம் ஒன்று அந்தக் கிராமத்திலிருந்த மரவெள்ளி, வாழை, மற்றும் தென்னம் தோட்டங்களையும் அழித்து நாசப்படுத்தியுள்ளன.

யானைகளின் அட்டகாசம் தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளரிடம் தெரிவித்தபோது அவர் யானைகளை வெருட்டக்கூடிய 7 யானை வெடிகளை மாத்திரம் தமக்குத் தந்ததாகவும், தெடர்ச்சியாக தமது கிராமத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்து வருதாகவும் அவர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் கோ.பிரசாத் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X