2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 16 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் புச்சாக்கேணி கிராமத்தில் உள்ள பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் நேற்று செவ்வாய்க்கிழமை (15) வழங்கப்பட்டன.

எகெட் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட 24 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது விவசாய உற்பத்திக்கான நெல்;, கோழிகள்,  சிறுகடை மற்றும் வியாபாரத்திற்கான உதவிகள் வழங்கப்பட்டன.

ஒவ்வொருவருக்கும் 45,000  ரூபா படி  வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுகின்றன. 

இதில் 22,500 ரூபா மானியமாகவும் மிகுதி மீளச் செலுத்தும் வகையிலும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதில் மீள அறவிடப்படும் பணம் ஏனைய தேவையுடையவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக எகெட் கரித்தாஸ் ஊடக இணைப்பாளர் எஸ்.ஜே.மைக்கல் தெரிவித்தார்.

மேலும், மேற்படி 24 குடும்பங்களுக்கும் கரித்தாஸ் சுவிஸ் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு எகெட் கரித்தாஸ் நிறுவனத்தால் வீடுகள் மற்றும் மலசலகூடங்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வில் கரித்தாஸ் சுவிஸ் பிரதிநிதி றெஜினா வெங், கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், கொழும்பு தேசிய நிறுவக திட்ட முகாமையாளர் எஸ்.தெய்வேந்திரராஜா, எகெட் கரித்தாஸ் நிறுவக வாழ்வாதார முகாமையாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X