2025 மே 03, சனிக்கிழமை

'வார உரைகல்' பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியிலுள்ள 'வார உரைகல்' எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா(புவி) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது வீட்டில் கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே காத்தான்குடி பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் இன்று வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி பத்திரிகையின் ஆசியரின் வீட்டுக்கு பொலிஸ் மோப்ப நாயுடன் இன்று காலை சென்ற பொலிஸ், தேடுதல் நடத்தியது. இதன்போது அவரது வீட்டிலிருந்து கஞ்சா கட்டு ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து மேற்படி பத்திரிகையின் ஆசிரியரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா 198 கிராம் எனவும், இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X