2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வவுணதீவுப் பிரதேச சிறுவர் பாதுகாப்புத் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


வவுணதீவுப் பிரதேச சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் ஆராயும் பிரதேசமட்ட சிறுவர் கண்காணிப்புக்குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மண்முனை மேற்குப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,  கோட்டக் கல்விப் பாணிப்பாளர் எஸ்.கணேசு, சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர் எம்.வரதராஜன், சிறுவர் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் ரி.பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பிரதேச சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும்  அதனை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

பாடசாலை இடைவிலகல், இளவயதுத் திருமணம், சிறுவர்களை பெற்றோர் வேலைக்கு அழைத்துச் செல்லல், பெற்ண்;றார் வெளிநாடு செல்வதால் பிள்ளைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாலர் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகள் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .