2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெள்ள அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பான ஒத்திகை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 13 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மழை வெள்ளம் ஏற்படும்போது, பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேறுதல் என்பது தொடர்பான ஒத்திகை நிகழ்வு நேற்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பண்டாரியாவெளிக் கிராமத்தில் இந்த ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அனர்த்த அபாய எச்சரிக்கை ஒலி விடுக்கப்பட்டது. இந்த ஒலியினை செவிமடுத்த பொதுமக்கள் மிகவும் பாதுகாப்பாக தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்களுக்கு குளிர்பானம்  வழங்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரணங்கள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதாகும்.

'சொண்' எனப்படும் அரசசார்பற்ற அமைப்பின் அனுசரணையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன்,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் த.துஷியந்தன், 'சொண்' அமைப்பின் இணைப்பாளர் க.சிவாகரன், கொக்கட்டிச்சோலை பொலிஸார், இராணுவத்தினர், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பட்டிப்பளை பிரிவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .