2025 மே 02, வெள்ளிக்கிழமை

'சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நல்ல கொந்தராத்துக்காரர்களாக மாறியுள்ளனர்'

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

'சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நல்ல கொந்தராத்துக்காரர்களாக மாறியுள்ளனர்' என சமுர்த்தி அதிகார சபையின் ஆலோசகர் எம்.நடேசராசா தெரிவித்தார்.

தற்போது புதிதாக ஸ்த்தரிக்கப்பட்டுள்ள திவிநெகும எனப்படும் வாழ்வெழுச்சி திணைக்களம் தொடர்பாக காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் கடமைபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நடைபெற்ற அறிவூட்டும் செயலமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (14) நடைபெற்ற இந்த செயலமர்வில் தொடர்ந்துரையாற்றிய அவர்,

'நாட்டிலுள்ள வறிய மக்களின் வறுமையை போக்குவதற்காக வறுமை தனிப்பு என்றும், வறுமை குறைப்பு என்றும் திட்டங்கள் வந்த போதிலும் இறுதியாக வறுமை ஒழிப்பு என்ற சமுர்த்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அது இன்று திவிநெகும எனப்படும் வாழ்வெழுச்சி திணைக்களத்தினுடாக சட்ட அங்கீகாரத்துடன் எதிர்வரும் 1.1.2014 தொடக்கம் இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வறுமை ஒழிப்பு முப்பரிமான வேலைத்திட்டத்தின் கீழ் வறிய மக்களுக்கான நலன்புரித்திட்டங்கள், அந்த மக்களின் உட்கட்டுமான அபிவிருத்திகள், குழு சேமிப்பு மூலம் வங்கிமுறையிலான குறுநிதி நடவடிக்கைகள் என்பன இந்த வறுமை ஒழிப்பு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான் சமுர்த்தி உத்தியேகாத்தர்களுக்கு கொடுத்த அந்த இலக்கை அவர்கள் சரியாக நிறைவேற்றவில்லை என்றே கூறவேண்டும்.

இறைவன் அவர்களுக்கு வழங்கிய கொடையை துஸ்பிரயேகாம் செய்துள்ளனர். இன்று சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நல்ல கொந்தராத்துக்காரர்களாக மாறியுள்ளனர்.

சமுர்த்தி சிறுகுழு செயற்பாட்டையும் அதை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சமுர்த்தி உத்தியேகாத்தர்கள்
மேற்கொள்ளவில்லை.

இதனால் இன்று இந்த திவிநெகு திணைக்களத்தின் நடவடிக்கைகள் தொடங்கவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சமுர்த்தி சிறுகுழுக்களையும் சமுர்த்தி சங்கங்களையும் பலப்படுத்தி அதனை ஒரு சரியான வடிவத்தின் கீழ் கொண்டு வருதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணிக்கப்பட்டுள்ளார்கள்.

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். இதை தவறவிட்டால் அவர்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.

சமுர்த்தி அதிகார சபையின் ஊடாக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் அனைத்தும் இந்த திவிநெகும திணைக்களத்தினூடாக சட்ட அங்கீகாரம் பெறுகின்றது.

திவிநெகு திணைக்களத்தின் மூலம் சமுர்த்தி சிறுகுழு செயற்பாடுகள் சமுதாய சங்கங்களின் செயற்பாடுகள் குறுநிதி வங்கிச் செயற்பாடுகள் அனைத்தும் சட்ட அங்கீகாரம் பெறுகின்றன.

தற்போது நடைமுறையிலுள்ள சமுர்த்தி வங்கி;ச்சங்கங்களின் செயற்பாடுகள் சட்ட அங்கீகாரத்துடன் திவிநெகும திணைக்களத்தின் ஊடாக செயற்படவுள்ளன.

பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் முறையை முன்னெடுப்பதுடன் வறுமையை ஒழித்து சமுதாய சமத்துவத்தை உறுதிப்படுத்துதல் என்ற கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது 1709 சமுர்த்தி வங்கிச் சங்கங்கள் உள்ளன. இந்த வங்கிச் சங்கங்களின் செற்பாடுகள் திவிநெகும திணைக்களத்தின் மூலம் இயற்றப்பட்டுள்ள சட்ட அங்கீகாரத்துடன் செயற்படவுள்ளன.

இந்நிலையில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் இந்த திட்டத்தினை சீரழித்து விடாமல் பொறுப்புடனும் இறைவன் நமக்கு தந்த கொடை எனக்கருதி செயற்பட வேண்டும்' என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X