2025 மே 02, வெள்ளிக்கிழமை

பல கோடி ரூபாய் மோசடி: முகாமையாளருக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

பல கோடி ருபாய்க்களை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட கல்முனையில் இயங்கி வந்த விவசாய பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தின் முகாமையாளரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.

வாகனங்களுக்கான தவணைக் கட்டண நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் தனது சட்டத்தரணிகள் சகிதம் நீதிமன்றில் ஆஜரான போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேற்படி விவசாய பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினூடாக முச்சக்கரவண்டி, உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை குத்தகை (லீசிங்) அடிப்படையில் பொது மக்களுக்கு பெற்றுக் கொடுத்து வந்த இம்முகாமையாளர், குறித்த நபர்கள் மாதாந்தம் செலுத்தி வந்த பணத்தையும் முற்பணத்தையும் தலைமைக் காரியாலயத்திற்கு செலுத்தாது மோசடி செய்துள்ளார்.

இதனால் தலைமைக் காரியாலயத்திலிருந்து வந்த விசேட குழுவினர் குறிப்பிட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் பின்னரே குறித்த வாகன சொந்தக்காரர்கள் தமது பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை அறிந்து கல்முனை பொலிஸில் பல முறைப்பாடுகளைச் செய்துள்ளதுடன் வழக்கு தாக்கலும் செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தலைமறைவாகியிருந்த குறித்த முகாமையாளர் சட்டத்தரணிகளுடன் கடந்த செவ்வாயன்று நீதிமன்றில் ஆஜரானார்.

இதன்போது இவருக்கு பிணை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரிய போதிலும் அதனை நிராகரித்த நீதிவான் குறித்த முகாமையாளரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .