2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஏழைகள் மற்றும் அங்கவீனர்களுக்கு கூரைத்தகடுகள் கையளிக்கப்பட்டன

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரின்  2013 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து வாழ்வாதாரத்திட்டத்தின் மூலம் கூரைத்தகடுகள் கையளிக்கப்பட்டன.

புல்மோட்டைப் பிரதேச ஏழைகள் மற்றும் அங்கவீனர்களுக்கே சனிக்கிழமை  அவரது அலுவலகத்தில் வைத்து  கூரைத்தகடுகள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் புல்மோட்டை பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.எம்.சமூன், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயலாளர்,ஆலோசகர், குச்சவெளி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் பொறுப்பாளர் நௌபல் மற்றும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கூரைத்தகடு கையளித்ததைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் உரையாற்றுகையில்,

இவ்வாறான வேலைத்திட்டத்தினூடாக ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதும் அவர்களை சுய தொழிலுக்காக ஊக்குவிப்பதுமே எனது நோக்காகும்;. மேலும் இவ்வேலைத்திட்டத்தினை எனது பிரதேசம் மட்டுமல்லாது எமது மாவட்டம் முழுவதும் நான் அமுல்படுத்தி வருகின்றேன். ஆனால் இம்முறை ஒதுக்கப்பட்டதை விட எதிர்காலத்தில் வாழ்வாதாரத்திட்டத்திற்காக கூடுதலான நிதியினை ஒதுக்குவதே எனது நோக்கமாகும். ஏனெனில் எமது மாவட்டத்தில் கூடுதலான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் தங்களது ஜீவனோபாயத்தை கொண்டு நடாத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களை இனங்கண்டு அவர்களையும் முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .