2025 மே 02, வெள்ளிக்கிழமை

போக்குவரத்து பொலிஸார் தாக்கியதாக இளைஞன் முறைப்பாடு

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி இளைஞர் ஒருவர் போக்குவரத்து பொலிசார் ஒருவரினால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார்.

மட்டக்களப்பு அலுவலகத்திலேயே முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இது பற்றி தெரியவருவதாவது மாலை காத்தான்குடி முதியோர் இல்ல வீதியினால் தனது மனைவியை ஏற்றிக் கொண்டு பயணித்த இளைஞனை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திலுள்ள வீதி போக்குவரத்து பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை துரத்திச் சென்று தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளைஞன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விளைஞனும் அவரது மனைவியும் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதாலேயே  போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் காயமடைந்த இளைஞன் எம்.பௌமி(28) என தெரியவருகின்றது.

குறித்த இளைஞனின் மனைவி தனது கனவரை காத்தான்குடியிலுள்ள மோட்டார் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் மிக கடுமையாக தாக்கியதாகவும் இதனால் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போனதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் முறைப்பாடு செய்துள்ளதுடன் தனது கனவரை தாக்கிய அப் பொலிஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலக அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .