2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஆசிரிய மாணவர்கள் வரவேற்பு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன, ரீ.எல்.ஜவர்பர்கான்


தேசிய கல்வி நிறுவகத்தின் மட்டக்களப்பு பிராந்திய கற்கை நிலையமான மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கல்விமாணி பட்ட கற்கை நெறிக்காக 2013 தொடக்கம் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு தெரிவு செய்யப்பட்ட ஆசிரிய மணாவர்கள் சனிக்கிழமை (16) வரவேற்கப்பட்டனர்.

இவர்களை வரவேற்கும் வைபவம் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் தேசிய கல்வி நிறுவகத்தின் தமிழ் பிரிவுக்கான பணிப்பாளர் செல்வி வி.விஜயலட்சுமி மற்றும் இதன் தொழிநுட்ப பிரிவு பிரதிப்பணிப்பாளர் நிகால் டயஸ், மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ஏ.எஸ்.யோகராஜா, மட்டக்களப்பு மத்தி வலயத்தின்  முன்னாள் வலய கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.செயினுதீன் உட்பட உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கல்விமாணி பட்ட கற்கை நெறிக்காக 2013 தொடக்கம் 2015ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு 135 ஆசிரிய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்கள் வரவேற்கப்பட்டதுடன் திசைமுகப்படுத்தலும் நடைபெற்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .