2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பல்திறன் ஆக்கக் கண்காட்சி

Menaka Mookandi   / 2013 நவம்பர் 18 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கண்ணன்குடா மகாவித்தியாலய பல்திறன் ஆக்கக் கண்காட்சியொன்று இன்று (18) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் தி.புலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இக் கண்காட்சியில் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) ஞா.சிறிநேசன், மண்முனை மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேசு உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கிராம அமைப்புக்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கிய தலைமைத்துவப் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களை முன்னிலைப் படுத்தி இக் கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .