2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விவசாய வினாவிடை போட்டியில் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் வெற்றி

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்

கிழக்கு மாகண விவசாயத்திணைக்களம் உருவாகி 25ஆம் ஆண்டு நிறைவையொட்டி கிழக்கு மாகாண விவசாயத்திணைக்களம் பாடசாலைகளுக்கிடையில் நடத்திய விவசாய வினாவிடைப்போட்டியில் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் வெற்றிபெற்றுள்ளது.

மேற்படி போட்டியானது திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையே அண்மையில் மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் சத்துருக்கொண்டானில் நடைபெற்றது.

தமிழ் மொழிமூலம் மட்டக்களப்பில் இருந்து பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயமும் அம்பாறையிலுருந்து தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயமும் திருகோணமலையிலிருந்து சேனையூர் மத்திய மகாவித்தியலாயமும் கலந்து கொண்ட வேளை சிங்கள மொழிமூலம் பாடசாலைகளாக அம்பாறையிலிருந்து உநுவத்துரு புபுல (மகாஓயா), திருகோணமலையிலிருந்து அக்ரபோதி மகா வித்தியாலம் ஆகிய பாடசாலைகளும் கலந்துகொண்டன.

மூன்ற சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியல் முதல் சுற்றில் சேனையூர் மத்திய மகா வித்தியாலயமும் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயமும் போட்டியிட்டு சேனையூர் மத்திய மகா வித்தியாலயம் வெற்றியீட்டி இறுதிச்சுற்றுக்கு தெரிவானது.

2வது சுற்றில் களுவாஞ்சிகுடி பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயமும், தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயமும் மோதிக்கொண்டன.

இதில் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் வெற்றியீட்டி இறுதிச்சற்றில் சேனையூர் மத்திய மகாவித்தியலாயமும் மட்டக்களப்பு பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் மோதியது.

இறுதியில் பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் அதிகமான புள்ளிகளை பெற்று வெற்றி வாகை சூடிக்கொண்டது.

சிங்கள மொழிமூல பாடசாலைப்போட்டியில் உநுவத்துரு புபுல மகாவித்தியாலயம் வெற்றிபெற்றது.

இந்நிகழ்விலே கிழக்குமாகாண விவசாயத்திணைக்கள பிரதி பணிப்பாளர் ஆர். கோகுலதாசன், எஸ்.எம்.ஹரீஸ் மற்றும் திருகோணமலை மாவட்ட பிரதிப்பணிப்பாளர் எம்.குகதாசன், அம்பாறை மாவட்ட பிரதி பணிப்பாளர் எம்.திஸ்ஸாநாயக்க மற்றும் மட்டக்களப்பு பிரதி பணிப்பாளர் இரா.ஹரிஹரன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .