2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோத வலைகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 19 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன், ஜவ்பர்கான்


மட்டக்களப்பு வாவியில் மீன்களைப் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒருதொகுதி சட்டவிரோத வலைகளை அந்த மாவட்ட கடற்றொழில் பரிசோதகர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

உப்போடை, நாவலடி, பாலமீன்மடு ஆகிய பகுதிகளிலிருந்து  5 டிஸ்கோ முக்கூட்டு வலைகளை கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட வலைகளை இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில்  சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது  மீனவர்கள் தோணியுடன் தப்பியோடியுள்ளதாகவும் அவர் கூறினார். 

வாவித் தொழிலை நம்பியிருக்கும் 11,250 குடும்பங்கள் சட்டவிரோத மீன்பிடியினால் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம். இது தொடர்பில் அறிவுறுத்தல்கள் விடுத்தும் விழிப்புணர்வு திட்டங்களை செயற்படுத்தியும் கட்டுப்படுத்த முடியாமலுள்ளதாகவும் அவர் கூறினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .