2025 மே 02, வெள்ளிக்கிழமை

தாய், சேய் சுகாதார சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாலமுனைப் பிரதேசத்தில் முதல் தடவையாக நிர்மாணிக்கப்பட்ட தாய், சேய் சுகாதார சிகிச்சை நிலையக் கட்டிடம் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திறந்து வைத்தார்.

மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.முபாறக் விடுத்த வேண்டுகோளுக்கமைய, பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முன்மொழிவில் இந்தத் தாய், சேய் சுகாதார சிகிச்சை நிலையக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்,  மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அச்சுதன் வாமினி, மண்முனைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சி.ஜே.அருள்பிரகாசம், மண்முனைப்பற்று பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.குணரட்னம், மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.முபாறக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .