2025 மே 02, வெள்ளிக்கிழமை

மிகவும் ஏழ்மையிலுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர், செங்கலடி, ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே கையளிக்கப்பட்டன.

இந்த நிலையில், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 32 வீடுகளும் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் 10 வீடுகளும் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 08 வீடுகளும் முஸ்லிம் எய்ட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டன.

ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐயன்கேணி, செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தம்பானம்வெளி, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செம்மண்ணோடை ஆகிய இடங்களில் தெரிவுசெய்யப்பட்ட மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள தமிழ், முஸ்லிம்  குடும்பங்களுக்கு  50 வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டதாக முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ.எம்.அஸ்மி தெரிவித்தார்.

சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா எனும்; மிகக் குறைந்த சிக்கனச் செலவு வீட்டுத் திட்டமாக இது அமைந்ததாக முஸ்லிம் எய்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .