2025 மே 01, வியாழக்கிழமை

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரி.எல்.ஜவ்பர்கான்

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட  ஓமடியாமடு கிராமத்தில் பெண்கள் தலைமை தாங்கும்  44 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

சிறுகடை வியாபாரம், விவசாய உற்பத்திக்கான நெல், மீன்பிடிக்கான உபகரணங்கள்,வீட்டுத்தோட்டத்திற்கான இயந்திரம், பயிர் விதைகள், கால்நடை வளர்ப்பிற்கான உதவிகள் என்பன இதன்போது வழங்கப்பட்டன.

இதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும்; 45.000 ரூபா படி 44 குடும்பங்களுக்கும் செலவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற இவ்வைபவத்தில் எகெட் நிறுவன மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் அருட்தந்தை கிறைட்டன் அவுஸகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .