2025 மே 02, வெள்ளிக்கிழமை

சடலங்களை துரிதமாக கையளிக்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 20 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பவர்களின் சடலங்களை விரைவாகவும் துரிதமாகவும் உறவினர்களிடத்தில் கையளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் தெரிவித்தார்.

இங்கு உயிரிழப்பவர்களின் சடலங்களை காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை உறவினர்களிடத்தில் கையளிக்கப்படும். அதேநேரம் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை சடலங்கள் கையளிக்கப்படமாட்டாது.

பிரேத பரிசோதனை செய்யப்பட வேண்டிய சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னரே சடலங்கள் உறவினர்களிடத்தில் கையளிக்கப்படும் எனவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தன் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .