2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போஷாக்குப் பொதிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


போஷாக்கு குறைந்த கர்ப்பிணித்தாய்மார்களுக்கும்  வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஒரு வயதுக்கு குறைந்த குழந்தைகளுள்ள  பாலூட்டும் தாய்மார்களுக்கும்  போஷாக்கு பொதிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர் நேற்று புதன்கிழமை போஷாக்கு பொதிகளை வழங்கி இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.

கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் போஷாக்குப் பொதிகள் ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.

500 ரூபா பெறுமதியான இந்த போஷாக்குப் பொதியில் 5 கிலோ அரிசி, 500 கிராம் பருப்பு, 200 கிராம் நெத்தலிக்கருவாடு ஆகிய உணவுப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், இதன்போது கடந்த ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்களுக்கான போஷாக்குப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இதற்கான நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் இ.குணரட்னம், சமுர்த்தி கருத்திட்ட உத்தியேகாத்தர் ஏ.எல்.எச்.எம்.இப்றாகீம் உட்பட சமுர்த்தி உத்தியேகாத்தர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .