2025 மே 01, வியாழக்கிழமை

காணிப் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவிடம் முறையிட வேண்டுகோள்

Super User   / 2013 நவம்பர் 21 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன், வடிவேல் சக்திவேல்

ஆரையம்பதி காணிப் பிரச்சினைகள் தொடர்பில் மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் மேலதிக மாவட்ட செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், நிலப் பயன்பாட்டு உதவி ஆணையாளர், நில அளவைகள் திணைக்கள அத்தியட்சகர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே ஆரையம்பதி தமிழ் மக்கள் தங்களது முறைப்பாடுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த குழவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆரையம்பதி காணி பிரச்சனை தொடர்பாக ஆரையம்பதி அபிவிருத்திக் குழுவினர் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் வாசுதோவன் மற்றும் மண்முனைப் பற்று பிரதேச சபைத் தவிசாளர் திருமதி ஞ.அருட்பிரகாசம் ஆகியோரை நேற்றய சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த காணி ஆரையம்பதிக்கு சொந்தமானது என்பதற்கான சட்டரீதியான ஆவணங்கள் தங்களது கையில் உள்ளதனையும் காணி இல்லாத அப்பாவி முஸ்லிங்கள் காணி பிடிப்பில் ஈடுபடவில்லை எனவும் காத்தான்குடி அரசியல் தலைமைகள் சிலரும் வர்த்தர்கள் சிலருமே இவ்வாறு எங்களது கணிகளை அடாவடித்தனமாக பிடித்து வருவதாகவும் அவர்களிடம் எடுத்தியம்பியுள்ளனர்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .