2025 மே 01, வியாழக்கிழமை

தொழில்வாய்ப்புக்கான நேர்முகப் பரீட்சை

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 26 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில்ச் சந்தை திட்டத்தில் நேர்முகப் பரீட்சை  இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. 

படித்துவிட்டு தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் நோக்கில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும்  தொழில்ச்சந்தை திட்டத்தில் நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையிலேயே கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அப்பிரதேச செயலாளர்  நிஹாரா மௌஜூத் தலைமையில் மேற்படி நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டது.

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையின்போது தனியார் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், உல்லாச ஹோட்டல்கள் என்பவற்றின் அதிகாரிகள் நேர்முகப் பரீட்சையை நடத்தினர். இதன்போது  தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஆர்.எம்.பாஷில் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .