2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

காத்தான்குடியில் கடற்கொந்தளிப்பு

Kanagaraj   / 2013 நவம்பர் 27 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி கடலில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கடுமையான கொந்தளிப்பு காரணமாக 5 படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அவற்றின்; இயந்திரங்கள் காணாமல் போயுள்ளன.

இச்சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தினால் பல இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக புதிய காத்தான்குடி ஜெய்லானி மீனவர் சங்க தலைவர் எம்.ஏ.றசூல் தெரிவித்தார்.

காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளே கடுமையான அலைகள் கரைக்கு வந்தமையால் சேதமடைந்துளளன.

குறித்த படகொன்றை கடலுக்குள் செலுத்துவதற்காக தள்ளிக்கொண்டிருந்த மீனவரே படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .