2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

போரினால் பாதிக்கட்டவர்களின் புள்ளி விபரங்கள் திரட்டு

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

'போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பிலும் சேதவிபரங்கள் தொடர்பிலும்  கணக்கெடுப்பொன்றைப் புள்ளி விவரத் திணைக்களம் மேற்கொள்ளவிருப்பதாக மாவட்டப் புள்ளி விவரவியலாளர் ஏ.அபுல்ஹுதா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'1983 ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட 2009 மே வரைக்குமான காலப்பகுதி வரை இடம்பெற்ற சகலவிதமான அழிவுகளும் இழப்புக்களும் இந்தப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், காயமடைந்தவர்கள், அங்கவீனமானவர்கள், அநாதரவானவர்கள் உட்பட அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களும் இந்த புள்ளிவிவரக் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.

நவம்பர் 25 ஆம் திகதியிலிருந்து டிசெம்பர் 20 வரையுள்ள காலப்பகுதிக்குள் இக்கணக்கெடுப்புக்கள் பூர்த்தி செய்யப்படவிருக்கின்றன.
கணக்கெடுப்பாளர்கள் வீடுவீடாகச் சென்று குடியிருப்பாளர்களிடம் பாதிப்பின் விவரங்களைக் கேட்டறிகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கட்டமை பற்றிய புள்ளிவிவரங்களைத் திரட்டுவதற்காக பயிற்றப்பட்ட 417 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

இதேவேளை ஏற்கனவே இந்தக் கணக்கெடுப்புக்கான பணிகள் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டிருப்;பதாக வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .