2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தொலைக்காட்சிப்பெட்டி சரிந்து விழுந்து சிறுமி மரணம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மீது தொலைக்காட்சிப்பெட்டியுடன் அதன் நிறுத்தி சரிந்து விழுந்ததினால் அச்சிறுமி மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின்  பெரியகல்லாறில் இன்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

பெரியகல்லாறைச் சேர்ந்த என்.ஆரக்ஷியா (வயது 4)  என்ற சிறுமியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுமி மீது தொலைக்காட்சிப்பெட்டியுடன் அதன் நிறுத்தி சரிந்து விழுந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக கல்லாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இச்சிறுமி, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக  வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. (படம்: ரி.எல்.ஜவ்பர்கான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X