2025 மே 03, சனிக்கிழமை

டெங்கு விழிப்புணர்வு உர்வலம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவிவரும் டெங்குநோயை கட்டுப்படுத்துவதற்கான முன்னேற்பாடாக விழிப்புணர்வு ஊர்வலம் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்துடன் இணைந்து மட்டக்களப்பு றொட்டறிக்கழகம் மற்றும் இராணுவத்தினர், மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன இணைந்து இந்த விழிபு;புணர்வு நடை பவணியை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டக்களப்பு கல்லடி புதிய பாலத்திலிருந்து ஆரம்பமான இந் நடைபவணி மட்டக்களப்பு காந்தி பூங்காவரை சென்று அங்கு விழிப்புணர்வு நடவடிக்கை இடம் பெற்றது.

இதன்போது இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு டெங்கு நோய்த்தாக்கம் தொடர்பிலான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
ஊர்வலத்தில் கலந்துகொண்டவர்கள் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான பாதாதைகளை தாங்கி சென்றனர்.

இந்த விழிப்புணர்வு நடைபவணியில் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார அலுவலகத்தின் தொற்று நோயியல் வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி காயித்திரி கௌரி பாலன், இராணுவ அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், ரொட்டறிக்கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X