2025 மே 03, சனிக்கிழமை

குற்றங்களை தடுப்பது தொடர்பிலான கூட்டம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 14 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பிரதேசங்களில் குற்றங்கள் ஏற்படாது தடுப்பது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் கூட்டங்களுக்கு அமைவாக வியாழக்கிழமை (13) காத்தான்குடி பிரதேச  செயலக மண்டபத்தில் கூட்டமொன்று நடைபெற்றது.

இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில், உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட் அப்கர், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிவில் பொறுப்பதிகாரி எஸ்.செல்வராசா, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு மற்றும் சமுதாயஞ்சார் சீர் திருத்த திணைக்கள காத்தான்குடி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.றசூல்சா உட்பட கிராம உத்தியோகத்தர்கள், கொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுhத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின்போது,  பிரதேசத்தில் குற்றங்கள் ஏற்படாது தடுப்பது மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு செயற்பாடுகள், கைதிகளின் குடும்ப நலன்புரி அபிவிருத்தி போன்றவற்றை மேற் கொள்வதற்கான பிரதேச செயலாளர் தலைமயில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

'பிரதேச்தில் குற்றங்களை தடுக்கவும் குற்றங்கள் செய்வோருக்கான தண்டனை தொடர்பாகவும் மக்கள் மத்தியில் விழிப்புனர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்' என காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் இதன்போது, தெரிவித்தார்.
 
பிரதேசங்களில் குற்றங்கள் ஏற்படாது தடுப்பது மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு செயற்பாடுகள், கைதிகளின் குடும்ப நலன்புரி அபிவிருத்தி போன்றவற்றை மேற்கொள்வதற்கான திட்டங்களை பிரதேச ரீதியாக ஆராய்ந்து பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான கூட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலுக்கும் அறிவுறுத்தலுக்கும் அமைவாக இக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X