2025 மே 03, சனிக்கிழமை

குடிநீர் கிணற்றுக்கு அருகில் நிலம் தாழிறக்கம்

Kogilavani   / 2014 பெப்ரவரி 15 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட ஓந்தச்சிமடம் 86 வீட்டுத் திட்டத்திற்கு குடிநீர் வழங்கும் குடிநீர் கிணற்றுக்கு அருகில் நிலம் சுமார் 5 தொடக்கம் 6 அடிவரை இன்று காலையில் (15) தாழ் இறங்கியுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

இவ்விடத்திற்கு விரைந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு-நடராச நிலமையினை நேரில் அவதானித்தார்.

குடிநீர் கிணற்றுக்கு அருகில் நிலம் தாழிறங்கியுள்ளதனால் தாழிறங்கிய பகுதியினூடாக நீர் மெலெழுந்துள்ளது.

இச்சம்பவம் தொர்பில் களுவாஞ்சிகுடி பகுதியின் நீர்பாசன சபையின் பொறியியலாளர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் செயலாளர், பிரதேச செயலாளர், பொதுச் சகாதார பரிசோதகர், கிராம சேவை உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்காலிகமாக இக்கிணற்றிலிருந்து இப்பிரதேச மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரினை இடைநிறுத்தி மண்முனை தென் எருவில் பற்று பிரதேசபையின் மூலம் இப்பகுதி மக்களுக்கு வவுசர் மூலம் குடி நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக  மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு-நடராச தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X