2025 மே 03, சனிக்கிழமை

கல்குடா பொலிஸ் நிலையத்தில் வெசாக் நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 15 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


வெசாக் பண்டிகையையொட்டி மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்திலுள்ள வறிய மக்களுக்கான உணவுப்பொதிகள், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் விசேட வழிபாட்டு நிகழ்வுகளும் கல்குடா பொலிஸ் நிலைய அதிகாரி தர்மிக்க நவரட்ண தலைமையில் பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (14) இடம்பெற்றன.

 இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திற்;கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேர்வின் சில்வா வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் சேனவிரட்ன, மதகுருமார்கள் மற்றும்  சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வானது 12 பொலிஸ் நிலையங்களில் இடம்பெறுவதற்க்கான நடவடிக்கையை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் வெசாக் தினத்தில் தான தர்மம் செய்வது மிகப் பெரிய புண்ணியமாகும் என்றும் இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதையிட்டு தாம் பெருமிதம் அடைவதாகவும் மாவட்டத்திற்க்கான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மக்களுக்கான தாகசாந்தி நிலையம்  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்;சகரினால் திறந்து வைக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X