2025 மே 03, சனிக்கிழமை

இரத்தான முகாம்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 16 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்,எஸ்.ரவீந்திரன்


களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை (16) இரத்தான முகாம் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கும் இரத்த வங்கிப் பிரிவு களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த கூறினார்.

இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கும் இரத்த வங்கிப் பிரிவால் இரத்தம் சேகரிக்கப்பட்டது.

களுவாஞ்சிகுடி பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி என்.ரி.அபூபக்கர் உட்பட 50 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இரத்தானம் வழங்கியுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த  தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X