2025 மே 03, சனிக்கிழமை

வீட்டுப்பணிப்பெண் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2014 ஜூலை 17 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,க.ருத்திரன்

சவூதி அரேபியாவில் வீட்டு எஜமானனர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட, ஏறாவூரைச் சேர்ந்த வீட்டுப்பணிப்பெண் கால்கள் இயங்க முடியாத நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில்  இன்று வியாழக்கிழமை (17) மாலை அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  வாழைச்சேனை வைத்தியசாலை பொலிஸ் பிரிவு தெரிவித்தது.

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கோரகல்லிமடு பிரதேச சபை வீதியைச் சேர்ந்த தங்கராசா ஞானம்மா (வயது 41) என்ற பெண்ணே பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அம்பியூலன்ஸ் மூலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்ட இப்பெண் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக வாழைச்சேனை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

2012ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 19ஆம் திகதி இவர் வீட்டுப்பணிப்பெண்ணாக சவூதி அரேபியா சென்றதாகவும் அங்கு இவரை வேலைக்கமர்த்திய எஜமானர்கள்; கொடுமைப்படுத்தியதாகவும் அதன் காரணமாக அவர் கால்கள் இயங்க முடியாத நிலையில் சவூதி அரேபிய வைத்தியசாலையில் மூன்று மாதங்கள்; அனுமதிக்கப்பட்டிருந்தாகவும் பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே ஒரு கால் முழுமையாக இயங்க முடியாத நிலையில் தற்சமயம் மற்றைய காலும் செயலிழந்து விட்டிருப்பதாகவும் உறவினர்கள் கூறினர்.

இதுசம்பந்தமாக வைத்தியசாலைப் பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.(படம்: க.ருத்திரன்)




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X