2025 மே 03, சனிக்கிழமை

மட்டு. றொட்டறிக்கழகத்துக்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2014 ஜூலை 20 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு றொட்டறிக்கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் றொட்டறியன் டொமின்கோ ஜோர்ஜ் நேற்று சனிக்கிழமை மாலை தனது  பதவியை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மட்டக்களப்பு கல்லடி செல்வா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  றொட்டறிக்கழகத்தின் தலைவர் றொட்டறியன் பி.ஆர்.டி.ராஜன்,  றொட்டறிக்கழகத்தின் உதவி ஆளுநர் றொட்டறியன் ஜெரோம் ராஜேந்திரன், மட்டக்களப்பு மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், மட்டக்களப்பு றொட்டறிக்கழத்தின் கடந்த வருடத்திற்குரிய  தலைவரான றொட்டறியன் எஸ்.சரவணபவான் புதிய தலைவரிடம் தலைமைப் பதவியை ஒப்படைத்தார்.

புதிய தலைவர் றொட்டறியன் டொமின்கோ ஜோர்ஜ் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதுடன், புதிய தலைவராக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

50 பேரை அங்கத்தவர்களாக கொண்டுள்ள மட்டக்களப்பு றொட்டறிக்கழகத்தின் 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவராக புதிய தலைவர் கடமையாற்றுவார்.

மேற்படி றொட்டறியன் டொமின்கோ ஜோர்ஜ் மட்டக்களப்பு றொட்டறிக்கழகத்தின் 55ஆவது தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது 25 பேருக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்,  மூன்று பேருக்கு காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன.  02 பேருக்கு முச்சக்கர சைக்கிள்களும் ஒருவருக்கு வயலின் கருவியும் வழங்கப்பட்டன.
 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X