2025 மே 03, சனிக்கிழமை

ஆசிரியர்களின் மனநோயை குணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

Gavitha   / 2014 ஜூலை 20 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் 242 ஆசிரியர்களின் மனநோயை குணப்படுத்துவது தொடர்பில் மகாணக் கல்வித் திணைக்களம் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வினவியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட ஆய்வுகளின்படி, 242 ஆசிரியர்கள் மனநோயாளர்களான நிலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் என்று மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.

இதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளை செய்ய முடியாமல் உள்ளதாக மாகணக்கல்வித் திணைக்களம் தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இடைவிலகிய மாணவர்களை கட்டாய கல்விக்காக மீண்டும் பாடசாலையில் சேர்த்தல், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு பரிகாரக் கற்பித்தல், சிறப்புச் சித்தியை அதிகரிக்க விசேட வகுப்புக்கள், கடந்த கால வினா விடை மீட்டல்கள், முன்னோடிப் பரீட்சைகள் மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டல் ஆலோசனை சேவைகள் என பல்வேறு சேவைகளை ஆசிரியர் பெருந்தகைகள் ஓய்வின்றி வழங்கிக் கொண்டே இருக்கின்றார்கள்.

இவ்வாறு மாணவர்களுக்கு முதலாந்தரம் முதல் பல்கலைக்கழகம் செல்லும் வரை, சேவைக்கு வந்தது முதல் சுயவிருப்பு ஓய்வு பெறும் வரை வழிகாட்டும் ஆசிரியர்களின் கடுமையான மனநோய்க்கு தீவிர வைத்திய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.

சேவைக்கு வந்து மூன்று மாதத்திற்குள் பொது - 169 சுற்றறிக்கை மூலம் ஒருமுறை மாத்திரம் வைத்திய அறிக்கை பெறும் நடைமுறை நம் நாட்டில் உள்ளது.

ஆனால் உலக நாடுகள் பலவற்றில் ஆண்டுக்கு இருமுறை உடல் நலப்பரிசோதனையுடன், உள நலப்பரிசோதனையும் நடாத்தப்படும் நடைமுறையுள்ளது.

மனநோய் பற்றி பொது மேடைகளில் பேசுவதைவிட பொருத்தமான மனநல உளவள ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் அதிக பயனைப்பெறமுடியும் என்பது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் கருத்து என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X