2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Gavitha   / 2015 ஜனவரி 19 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (18) உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நவீன பொருளாதார, கல்வி மற்றும் சமூக விவகாரங்களுக்கான வலையமைப்பான மீஸான் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 142 குடும்பங்களுக்கு இந்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.எம்.நழீம், மற்றும் அதன் செயலாளர் ஏ.எஸ்.சமீம் உட்பட அதன் நிர்வாகிகள் இந்த உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது ஒரு குடும்பத்துக்கு தலா ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X