2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சங்கிலியை அறுத்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 22 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஒருவரை 11 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லா நேற்று புதன்கிழமை உத்தரவிட்டார்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை, மோட்டார் சைக்கிளில் வந்து  சந்தேக நபர் அறுத்தபோது, அவரை  பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபரை தம்மிடம் ஒப்படைத்ததாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.  
சுமார் இரண்டு பவுண் தங்கச்சங்கிலியை இவர் அறுத்ததாகவும் பொலிஸார் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X