Gavitha / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவைத்தலைவராக நியமனம் பெறும் அருட்.திரு எஸ்.எஸ். லோரன்ஸ் அவர்களைப் பாராட்டும் நியமன வழிபாடு சனிக்கிழமை (14) புளியந்தீவு மெதடிஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அம்பாறை மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை, அருட்திருவாளர்களான எஸ்.ஜே. கதிரேசபிள்ளை, எஸ்.டி. தயாசீலன், ரோகித. டீ. சில்வா, சுமித் வீரமுண்ட, வி. ஆசிரி பெரேரா சகிதம் அதிதிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது, பவனிப்பாடல், துதிப்பாடல், கீதம் மற்றும் காணிக்ககைப் பாடல் என்பன பாடல் குழுவினரால் பாடப்பட்டன.
வடக்கு கிழக்கு திரு மாவட்ட அவையின் தலைவருக்கான நியமனத்தை ஓய்வு பெற்றுச் செல்லும் அவைத் தலைவர் அருட்கலாநிதி ஏ.டபிள்யூ. ஜெபநேசன் மற்றும் அருட்திருவாளர்கள் வழங்கினர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .