Sudharshini / 2015 பெப்ரவரி 15 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு, கல்லடிக் கடலில் நீண்ட நாட்களின் பின்பு கரைவலையில் ஞாயிற்றுக்கிழமை (15) நெத்தலி மீன்கள்; பிடிபட்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக கடலில் மீன்கள் பிடிபடாத நிலையில் கடலுணவுகளுக்கு மட்டக்களப்பில் பெரும் கிராக்கி காணப்பட்ட நிலையில், ஆள்கடலில் பிடிக்கப்படும் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன.
இதேவேளை பிடிக்கப்பட்ட பாரை, சுறா, வளையா போன்ற ஆள்கடல் மீன்கள் கிலோ 800 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும், நெத்தலி மீன்கள் கிலோ 300 ரூபாய்க்கும் விற்பனை செய்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 13,125 கடற்றொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரமாக கடற்றொழிலை நம்பி வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

45 minute ago
58 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
58 minute ago
3 hours ago