2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உறவுகள் வந்துசேர வேண்டுமெனக் கூறி உண்ணாவிரதம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு மற்றும்  காணாமல் போனவர்களினுடைய உறவினர்கள் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவுக்கு முன்பாக திங்கட்கிழமை (16)  அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில்; கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், அவர்களின் குடும்பங்கள்,  நண்பர்கள்; இந்த அடையாள உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் போன தங்களது  உறவுகள், தங்களை  வந்து சேர்வதற்காக இந்த அடையாள உண்ணாவிரதத்தை நடத்துவதாக இதன் ஏற்பாட்டாளார்கள் தெரிவித்தனர்.

'யுத்தப்பிடியில் சிக்கிய எமது உறவுகள் எங்கே', 'நல்லாட்சிக்கான அரசே இருள் சூழ்ந்த எம் வாழ்க்கைக்கு ஒளி கொடுக்க என் மகனை மீட்டுக்கொடுங்கள்', 'ஆசை மகன் முகம் காண ஏங்குகின்றேன்', 'நல்லாட்சிக்கான அரசே என் பிள்ளையை மீட்டுத்தா போன்ற வாசகங்கள்  எழுதப்பட்ட சுலோக அட்டைகளை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டோர் தாங்கியுள்ளனர்.

இந்த அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மகஜர் ஒன்று  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  அனுப்பிவைப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடத்தில் கையளிக்கவுள்ளதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X